கர்நாடகத்தில் மந்திரிகளுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு - மாநில அரசு உத்தரவு
கர்நாடகத்தில் மந்திரிகளுக்கு கூடுதல் இலாகாக்களை ஒதுக்கீடு செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசு, கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதலின்படி மந்திரிகளுக்கு கூடுதல் இலாகாக்களை ஒதுக்கியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல் தொழில்நுட்ப துறை, உயர்கல்வித்துறையை நிர்வகித்து வருகிறார். அதனுடன் சேர்ந்து அவருக்கு கூடுதல் இலாகாவாக மருத்துவ கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
* துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி போக்குவரத்து துறையை கவனித்து வருகிறார். தற்போது அவருக்கு கூடுதலாக வேளாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* கிராம மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பாவுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி கூடுதல் இலாகாவாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
* மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு கூடுதல் இலாகாவாக பொதுத்துறை நிறுவனம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கூடுதல் இலாகாவாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
* பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், கூடுதலாக தொழிலாளர் துறை இலாகாவை கவனிப்பார்.
* வீட்டுவசதி துறை மந்திரி வி.சோமண்ணா, தோட்டக்கலை மற்றும் பட்டுப்பூச்சி வளர்ப்பு துறையை கூடுதல் இலாகாவாக கவனிப்பார்.
* சுற்றுலாத்துறை மந்திரி சி.ரவி, கூடுதல் இலாகாவாக சர்க்கரை துறையை நிர்வகிப்பார்.
* உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, கூட்டுறவு துறை கூடுதல் இலாகாவாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* மந்திரி சி.சி. பட்டீலுக்கு கூடுதலாக வனம் மற்றும் சுற்றுச்சுழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
* கலால்துறை மந்திரி நாகேஷ், திறன்மேம்பாடு, தொழில் முனைவோர் துறையை கூடுதலாக கவனிப்பார்.
* மந்திரி பிரபு சவானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் ஹஜ் துறை கூடுதல் இலாகாவாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
* பெண்கள் நலத்துறை மந்திரி ஜோலே சசிகலா அன்னா சாகேப் கூடுதலாக உணவு, பொது வினியோக துறையை கவனிப்பார்.