தானேயில் ரூ.10 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
மராட்டியத்தில் அடுத்த மாதம் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கிறது.
தானே,
வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சம்பவத்தன்று தானே பிவண்டி பகுதியில் ஒருவர் அதிகளவில் பணத்துடன் வர இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் பிவண்டி, சவிந்திரா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் அந்த காரில் ரூ.10 லட்சம் இருந்தது. ஆனால் அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் காரில் இருந்தவர்களிடம் இல்லை. எனவே அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதை கருவூலத்தில் டெபாசிட் செய்தனர்.
இந்த தவலை பிவண்டி கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி மோகன் நலட்கர் கூறினார்.