வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து 10 மாவட்ட கலெக்டர்களுடன் ஆதிதிராவிடர் ஆணைய குழு தலைவர் ஆய்வு
வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து மதுரையில் மாவட்ட கலெக்டர்களுடன் ஆதிதிராவிடர் ஆணையக் குழு தலைவர் ஆய்வு நடத்தினார்.
மதுரை,
வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடுப்பு சட்டம் ஆகியவை குறித்த ஆய்வு கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். ஆணைய குழு தலைவர் ராம்சங்கர் கத்தேரியா தலைமை தாங்கி ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் 10 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் முரளிதரன், கலெக்டர்கள் ராஜசேகர் (மதுரை), விஜயலட்சுமி (திண்டுக்கல்), பிரசாந்த் (கன்னியாகுமரி), உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை), வீரராகவராவ் (ராமநாதபுரம்), ஜெயகாந்தன் (சிவகங்கை), பல்லவி பல்தேவ் (தேனி), சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), சிவஞானம் (விருதுநகர்), மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன்,
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஐ.ஜி.க்கள் ஆனி விஜயா (மதுரை), ஜோஷி நிர்மல் குமார் (திண்டுக்கல்), ரூபேஷ் குமார் மீனா (ராமநாதபுரம்), போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (மதுரை), சக்திவேல் (திண்டுக்கல்), ஓம் பிரகாஷ்மீனா (ராமநாதபுரம்), ரோஹித் நாதன் ராஜகோபால் (சிவகங்கை), பாஸ்கரன் (தேனி), அருண்சக்தி குமார் (நெல்லை), மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்,
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தனலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடுப்பு சட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், கலவரங்களில் இறந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு அரசுப்பணி ஒதுக்குதல் மற்றும் நிவாரணத்தொகை வழங்கியது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் துறைவாரியாக செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.