கீரனூர் பகுதியில் பலத்த மழை; வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
கீரனூர்,
கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஓரிரு நாட்களாக இடியுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் தொடங்கும் மழை, சூறைகாற்றுடன் நள்ளிரவு வரை பெய்து வருகிறது. இதனால் வயல் வரப்புகள், குளங்கள் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ரோடுகளில் அரிப்பு ஏற்பட்டத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கீரனூர் பகுதியில் விவேகானந்தா நகர், அய்யப்பன் நகர், பரந்தாமன் நகர், வி.ஐ.பி. நகர், சிவன் கோவில் நுழைவுவாயில் போன்ற இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் குடியிருப்போர் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டன. சிவன் கோவில் நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்கி நின்றதால் நேற்று பிரதோஷத்திற்கு வந்த பக்தர்கள் மாற்று பாதையில் கோவிலுக்கு சென்று வந்தனர். கீரனூரை அடுத்த களமாவூர், மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கன மழையில் மேம்பாலம் ரோடு இருபுறமும் கொட்டப்பட்டிருந்த மணல் தடுப்புகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீரமைப்பு வேலைகள் நிறுத்தபட்டுள்ளது.