தீபாவளி பட்டாசுகள் விற்பனை உரிம விண்ணப்ப காலம் நீட்டிப்பு - கலெக்டர் சிவஞானம் தகவல்

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான உரிம விண்ணப்பம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-25 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளியையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்க விண்ணப்பங்களை இணைய வழியாக சமர்ப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பங்கள் இணையதளம் வழி மூலமாக கடந்த 31-ந்தேதி வரை பெறப்பட்டன.

தற்போது தீபாவளி பட்டாசு விற்பனைக்காக உரிமம் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த நிலையில், மாவட்டங்களில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் இப்புதிய நடைமுறை தொடர்பாக தங்களுக்கு தெரியவரவில்லை என்றும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நடைமுறையை சரிவர அறிய இயலாத காரணத்தினால் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய இயலாத வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன்கருதி, இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வருகிற 28-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த கால நீட்டிப்பினை அவர்கள் பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்