குழித்துறை அருகே பரிதாபம்: தண்டவாள பராமரிப்பு பணியின்போது, 2 தொழிலாளர்கள் ரெயில் மோதி பலி
குழித்துறை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்கள்.
குழித்துறை,
நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரெயில் பாதையை இரட்டை பாதையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது குமரி மாவட்டம் குழித்துறை ரெயில் நிலையத்தை அடுத்த கண்ணன்கோடு பகுதியில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இரட்டை பாதைக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த புதிய பாலம் அமைக்கும் இடத்தின் அருகே பழைய பாலத்தில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இதன் வழியாக தான் தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த பழைய பாலத்தில் நேற்று தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் ரெயில்வே ஊழியர்களான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் ஜெய்சந்த் மீனா (வயது 32), கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மதுசூதனன் (62) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணியளவில் பாலத்தில் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, மும்பையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைகண்ட ஊழியர்கள் 2 பேரும் பாலத்தில் ஒதுங்கி நிற்கும் இடத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால், அதற்குள் அந்த ரெயில், 2 பேர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
இதை பார்த்தவர்கள் குழித்துறை ரெயில் நிலையத்துக்கும், நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. இங்கிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த ரெயில், விபத்தின் காரணமாக 2 மணிநேரம் தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதேபோல் திருவனந்தபுரம்–திருச்சி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பாறசாலை ரெயில் நிலைத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, 1½ மணிநேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மேலும் கன்னியாகுமரியில் இருந்து கொல்லம் செல்லும் ரெயிலும் 1½ மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.