ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஈரோட்டில், கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக தங்கவேல் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இவர் பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பூசாரி தங்கவேல், கோவில் நடையை திறந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் கருவறை முன்பு வைக்கப்பட்டு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார், கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் 2 பேர் கோவில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றதும், பின்னர் அவர்கள் இரும்பு கம்பியால் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் அதில் பதிவாகி இருந்தது.
கொள்ளையர்கள் 2 பேரும் முகமூடி அணிந்து இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. கோவில் உண்டியலில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்று பூசாரி தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.