டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கான தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கான தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், மாவட்ட நிர்வாகிகள் வேடியப்பன், முத்து, கக்கன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வட்டார தலைவர்கள் சுபாஷ், பூபதிராஜா, வஜ்ஜிரம், வேலன், பிரகாசம், விஸ்வநாதன், ராஜபிரகாஷ், ஜனகராஜ், சண்முகம், முனுசாமி, காமராஜ், சரவணன், மாதப்பன், மாது உள்பட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இதர பிற்பட்டோர் பிரிவுக்கான தலைவர் நவீன் நன்றி கூறினார்.கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி தர்மபுரி எஸ்.வி.ரோடு காந்தி சிலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பாதயாத்திரை நடத்துவது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது, டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கான தமிழக அரசின் தடை உத்தரவை பாரபட்சமின்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.