குன்றத்தூரில், வேன் மோதி பள்ளி பஸ் டிரைவர் சாவு

குன்றத்தூரில் வேன் மோதி பள்ளி பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-24 22:15 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூர், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 38). அங்குள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த வேன், மொபட் மீது மோதியது.

இதில் ஜெகதீஸ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் ஜெகதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு வேன் டிரைவரை தேடி வருகின்றனர். ஜெகதீஸ் இறந்து நீண்ட நேரமாகியும் போலீசார் வரவில்லை என்று கூறி ஜெகதீஸ் குடும்பத்தினர் அங்கு திரண்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியல் செய்ய முயன்றனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் சரியாக பதிவாகவில்லை அதன் அருகே மரக்கிளைகள் வளர்ந்து மறைத்தபடி இருந்தது. அந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்