அரியலூரில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்

அரியலூரில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

Update: 2019-09-24 23:00 GMT
அரியலூர்,

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1க்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மற்றும் 28, 29-ந் தேதிகள் என 3 நாட்கள் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு நிலை-1க்கான இணையவழி ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல், இந்திய காலாசாரம், இயற்பியல், வேதியியல், கணிதவியல், வணிகவியல், புவியியல், தாவரவியல், உயிரியல், விலங்கியல், அரசியல் அமைப்பு, வரலாறு, பொருளியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 போன்ற பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் நடை பெறும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்விற்கு 400 தேர்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். இத்தேர்வு தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு, பஸ் வசதிகள், மின்சார வசதிகள், கணினி வசதிகள், இணையதள வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண் 04329-220909 மற்றும் செல்போன் எண் 8248597781 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்