ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு ரூ.1½ கோடி கடல் அட்டைகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு அரிய வகை உயிரினமான கடல் அட்டைகளை கடத்த முயற்சி நடப்பதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் மண்டபம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், கணேசமூர்த்தி மற்றும் போலீசார் பாம்பன் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ராமேசுவரத்தில் இருந்து மண்டபம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அதில் வந்த 2 பேர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.
பின்னர் காரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் பல சாக்கு மூடைகள் இருந்தன. அவற்றை அவிழ்த்து பார்த்த போது அதில் கடல் அட்டைகள் ஏராளமாக இருந்தன.
மொத்தம் 350 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அந்த கடல் அட்டைகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவையாக இருந்தன. இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கைதான 2 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் ராமேசுவரம் எம்.ஆர்.டி.நகரை சோந்த சத்தியமூர்த்தி(வயது 36), வேர்க்கோடு பகுதியை சேர்ந்த லிங்கநாதன்(29) என்பதும், அவர்கள் இந்த கடல் அட்டைகளை வேதாளை கடற்கரைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கடத்தல் ஏஜெண்டுகள் மூலமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக காரில் ஏற்றி கொண்டு வந்ததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று கடலோர போலீசார் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் முயற்சியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவர்களையும் தேடிவருகிறார்கள்.