தற்காலிக பட்டாசு கடை நடத்துவதற்கு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்துவதற்கு இணையவழி மூலமாக உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த இணையவழி மூலமாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பட்டாசு விற்பனை செய்ய விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிந்து விட்டது. ஆனால் மாவட்டங்களி்ல் இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை தங்களுக்கு மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரியவில்லை. இதனால் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் தற்காலிகமாக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாத வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது.
இந்த கால நீட்டிப்பு பயன்படுத்தி உடனடியாக இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சுகுமார் தெரிவித்துள்ளார்.