கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29–ந் தேதி தொடங்குகிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29–ந் தேதி தொடங்குகிறது. விழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 29–ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (அக்டோபர்) 8–ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 29–ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, 9.30 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலை சுற்றி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலை சுற்றி பவனி வருதல், இன்னிசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.
பரிவேட்டை
விழாவின் இறுதி நாளான 8–ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் மகாதானபுரம் நோக்கி வேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஊர்வலம் சன்னதி தெரு, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, மெயின்ரோடு, ரெயில்நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம், பரமார்த்த லிங்கபுரம், தங்க நாற்கரசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
ஆறாட்டு
நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் மற்றும் கன்னியாகுமரி பகவதிஅம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.