நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்,
நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூரை அடுத்த தெற்கு பால்பண்ணைச்சேரி, வெளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் தெற்கு பால்பண்ணைச்சேரியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தெற்கு பால்பண்ணைச்சேரி நாடார் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 50), சிவசக்தி நகரை சேர்ந்த நாகராஜன் (60), வெளிப்பாளையத்தை சேர்ந்த காமராஜ் (55), நாகூர் சிவன் தெற்குவீதியை சேர்ந்த தென்னரசு(57) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.