வேப்பனப்பள்ளி அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்

வேப்பனப்பள்ளி அருகே விவசாய பயிர்களை யானைகள் கூட்டம் நாசம் செய்து சென்றன.

Update: 2019-09-22 23:00 GMT
வேப்பனப்பள்ளி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது. ஹலேகிரு‌‌ஷ்ணா புரம், நல்லூர் கிராமங்கள். இந்த பகுதிக்கு சூளகிரி வனப்பகுதியில் இருந்து 5 காட்டு யானைகள் வந்துள்ளன. இந்த யானை கூட்டங்கள் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் முகாமிட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் அறுவடை செய்து ஏற்றுமதி செய்வதற்காக பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தக்காளிகளை அழித்து நாசம் செய்தன. நேற்று காலை தக்காளிகளை யானைகள் சேதப்படுத்தி இருப்பதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விரட்ட வேண்டும்

யானைகள் அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை யினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அட்டகாசம் செய்யும் 5 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்