எட்டயபுரம் அருகே, வாகனம் மோதி விவசாயி பலி
எட்டயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள பட்டிதேவன்பட்டியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 85) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் எட்டயபுரம் செங்கோட்டையில் இருந்து புதூர் செல்லும் சாலையில் உள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் சைக்கிளில் ஆவுடையப்பன் தனது தோட்டத்துக்கு சென்று கொண்டு இருந்தார். தோட்டத்தின் அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஆவுடையப்பன் சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அருப்புகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடையப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.