புரட்டாசி மாதம் எதிரொலி: மீன்கள் விலை வெகுவாக குறைந்தது ஆடு-கோழி இறைச்சியில் மாற்றம் இல்லை
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சென்னை மீன் மார்க்கெட்களில் மீன்கள் விலை வெகுவாக குறைந்திருக்கிறது. அதேவேளை ஆடு-கோழி இறைச்சியில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
சென்னை,
விரதத்துக்கு பெயர் போன புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டு விடுவார்கள். இதனால் எப்போதுமே புரட்டாசி மாதத்தில் மீன், ஆடு-கோழி இறைச்சி விற்பனை சுணக்கம் அடையும். புரட்டாசி மாதம் முடியும் வரை இந்த போக்கு நீடிக்கும்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 18-ந்தேதி பிறந்தது. இதையொட்டி விரதம் மேற்கொள்ளும் வகையில் அசைவ பிரியர்கள் இறைச்சி மீதான ஆசைக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளனர்.
இதனால் சென்னையில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, எண்ணூர், புழல் காவாங்கரை, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்களில் தற்போது விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி ஏ.துரை கூறியதாவது:-
புகழ்பெற்ற வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்கோடி தமிழக பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மீன்கள் கொண்டுவரப்படுகின்றன. தினமும் 40 முதல் 60 வண்டிகள் வரையில் சுமார் 250 டன் வரையில் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு மீன் வரத்தில் பிரச்சினை இல்லை என்றாலும் மீன்கள் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. உதாரணமாக ரூ.800 வரை விற்பனையான வஞ்சிரம் தற்போது ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. புரட்டாசி மாதம் முடியும் வரையில் மீன்கள் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-
சங்கரா (சிறியது) - ரூ.70, சங்கரா (பெரியது) - ரூ.100, சீலா (சிறியது) - ரூ.60, சீலா பெரியது - ரூ.120, வஞ்சீரம் (பெரியது) - ரூ.400, வஞ்சிரம் (சிறியது) - ரூ.300, வவ்வால் - ரூ.300, பாறை - ரூ.200 முதல் ரூ.250 வரை, நகரை - ரூ.40 முதல் ரூ.50 வரை, காரல் - ரூ.80, நெத்திலி (சிறியது) - ரூ.60, நெத்திலி (பெரியது) - ரூ.100, மத்தி - ரூ.50 முதல் ரூ.60 வரை, கவளை - ரூ.50 முதல் ரூ.60 வரை, வாலை - ரூ.50 வரை, கிழங்கான் - ரூ.50, நண்டு (சிறியது) - ரூ.70, நண்டு (பெரியது) - ரூ.100, வலை மீன் - ரூ.150, கானாங்காத்தான் - ரூ.80, கடமான் (சிறியது) - ரூ.50, கடமான் (பெரியது) - ரூ.100, சுறா - ரூ.100 முதல் ரூ.120 வரை, பால்சுறா - ரூ.200, இறால் - ரூ.100 முதல் ரூ.200 வரை (ரகத்துக்கு ஏற்ப), வளர்ப்பு மீன்களான கட்லா - ரூ.120, ஏரி வவ்வால் (ரூப் சந்த்) - ரூ.100, ரோகு - ரூ.120.
நகரின் முக்கிய இடங்களில் மொத்த விலையில் மீன்கள் வாங்கும் இரண்டாம் தர வியாபாரிகள் வண்டி வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.20 முதல் ரூ.40 வரை மீன்களை கூடுதலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரி எம்.சி.பி.சதீஷ்குமார் கூறியதாவது:-
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வியாபாரம் பாதித்துள்ளது. மீன்களின் விலையும் பாதிக்கு பாதி என குறைந்திருக்கிறது. அசைவ பிரியர்களின் முக்கிய கவனம் மீன்கள் மீது தான் இருக்கும்.
அந்தவகையில் புரட்டாசி மாத தாக்கம் மீன்கள் வியாபாரத்தில் தெரிகிறது. தினமும் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டுக்கு 20 டன் அளவில் மீன்கள் கொண்டு வரப்படும். ஆனால் இப்போது 10 முதல் 15 டன்கள் அளவிலேயே மீன்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மீன்கள் விலை குறைந்தபோதிலும் ஆடு-கோழி இறைச்சி விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரைஷி கூறியதாவது:-
சென்னைக்கு ராஜஸ்தான், கொல்கத்தா, கூடூர், ஐதராபாத், குண்டூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆடுகள் இறைச்சிக்காக வருகிறது. அந்தவகையில் தினமும் சென்னைக்கு 5 லோடுகளில் (சுமார் 2 ஆயிரம் எண்ணிக்கையில்) ஆடுகள் கொண்டு வரப்படுகின்றன. புரட்டாசி மாதம் தொடங்கி ஒரு சில நாட்களே ஆவதால் இறைச்சி விற்பனையில் ஒன்றும் மாற்றம் இல்லை.
ஏனென்றால் பெரும்பாலான இறைச்சிகள் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களுக்கு தான் செல்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் ஆட்டிறைச்சி விலையில் மாறுபாடு ஏற்படலாம். தற்போது ஆட்டிறைச்சி (கிலோவில்) ரூ.640-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கோழி இறைச்சி விற்பனையும் நன்றாக நடக்கிறது. ஒரு கிலோ கோழிக்கறி (தோலுடன்) ரூ.97-க்கும், உரித்த நிலையில் கோழிக்கறி ரூ.200-க்கும் விற்பனை ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.