சிகரெட்டுக்கு கூடுதலாக பணம் கேட்டதால் தகராறு சமையல் கரண்டியால் வாலிபர் அடித்துக்கொலை
சிகரெட்டுக்கு கூடுதலாக பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சமையல் கரண்டியால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம்தொடர்பாக டாஸ்மாக் பார் மேலாளர் உள்பட 4பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை,
கோவைகாந்திபுரம் நேரு வீதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது அருந்த சென்றார். மது அருந்திய அவர் பார் ஊழியரிடம் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது அவர்சிகரெட்டுக்கு கூடுதலாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
சிகரெட்டை ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்று வாலிபர் தட்டிக்கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஊழியர் அங்கு இருந்த பார் மேலாளர் மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் மது போதையில் இருந்த வாலிபரை சமையல் கரண்டியால் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பின்னர் டாஸ்மாக் மதுக்கடையை விட்டு வெளியே வந்த வாலிபர் படுகாயத்துடன் நஞ்சப்பா ரோட்டில் விழுந்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குஅவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர்சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே வாலிபரின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் சமையல் கரண்டியால்அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, பார் மேலாளர் கவுதம் (வயது 26), ஊழியர்கள் கிரி (26), பாபு என்கிற சியான் (46), வினோத் (26) ஆகிய 4பேரை போலீசார்கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம்தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.