சூளகிரி அருகே, ஏரி தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
சூளகிரி அருகே ஏரிதூர்வாரும் பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
சூளகிரி ஒன்றியம் பி.குருபரப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, கும்பளம் ஊராட்சியில் உள்ள வீரப்பன்குட்டை மற்றும் செம்பரசனபள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொரல்லதொட்டி ஏரி தூர் வாரும் பணிகள் முடிவடைந்ததையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் பிரபாகர், நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் மொத்தம் 100 ஏரிகள், 425 குளம், குட்டைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், விமல்ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், தாசில்தார் ரெஜினா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.