பண்ருட்டி, வேப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி, வேப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-18 22:00 GMT
பண்ருட்டி, 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து பண்ருட்டி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.மணி, சபியுல்லா, வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர தலைவர்கள் திலகர், அன்பழகன், ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், ஏபேல்ராஜன், இளைஞர் காங்கிரஸ் ஸ்ரீதர், பழனி, மகளிரணி காங்கிரஸ் பாலூர் ரேவதி, மங்கவத்தாள், கலியபெருமாள், வெற்றி செல்வன், குமாரராஜன், சிவானந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பூர் கூட்டுரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜீவ்காந்தி, விஜயக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை, நேரு, நிர்வாகிகள் கலியபெருமாள், குப்புசாமி, பீட்டர் சின்னகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்