பவாய் அருகே பள்ளி மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்த டியூசன் ஆசிரியர் பிடிபட்டார்

13 வயது பள்ளி மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-15 22:15 GMT
மும்பை, 

13 வயது பள்ளி மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

டியூசன் ஆசிரியர்

மும்பை பவாயை சேர்ந்தவர் எஸ்.ஜி. ஹேண்ட்லே. டியூசன் ஆசிரியர். இவரது டியூசன் வகுப்பில் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி படித்து வருகிறாள். சம்பத்தன்று டியூசனுக்கு வந்திருந்த அந்த சிறுமியை தனது அறைக்கு வரவழைத்து எஸ்.ஜி. ஹேண்ட்லே பாலியல் உறவுக்கு அழைத்து உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து அழுதபடியே வீட்டுக்கு சென்றாள்.

கைது

இதையடுத்து அந்த சிறுமி, தாயிடம் டியூசன் ஆசிரியர் தன்னை பாலியல் உறவுக்கு அழைத்தது பற்றி கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அவளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியர் எஸ்.ஜி.ஹேட்லேயை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்