கருப்பு கவுனி அரிசியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட 5 உணவு பொருட்கள் கலெக்டர் அறிமுகப்படுத்தினார்
இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் கருப்பு கவுனி அரிசியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட 5 உணவு பொருட்களை கலெக்டர் அண்ணாதுரை அறிமுகப்படுத்தினார்.
தஞ்சாவூர்,
இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் சுப்பிரமணியனின் 117-வது பிறந்தநாளையொட்டி தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சி நேற்றுகாலை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பாஸ்தா, சேமியா, நூடுல்ஸ், குக்கீஸ், சிறுதானிய படலம் ஆகியவற்றை கலெக்டர் அண்ணாதுரை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறும்போது, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் உணவு பதப்படுத்துதல் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்வதுடன், உணவு பதப்படுத்துதல் சார்ந்த பயிற்சி வகுப்புகள், ஆலோசனைகள், தர பரிசோதனை சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய பல்வேறு தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தங்களது அறிவு திறனை வளர்த்து கொள்ள உதவும் என்றார்.
செயல்விளக்கம்
இதில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுசாமி, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இவர்கள், உணவு பொருட்களின் கண்காட்சியையும், விவசாய பொருட்களில் மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்த செயல்விளக்கத்தையும் பார்வையிட்டனர். உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்காட்சியின் 2-ம் நாளான இன்று(திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரி மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.