நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி சமுத்திர ராஜ வழிபாடு நடைபெற்றது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதை தொடர்ந்து மாலையில் செடில் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.