திருப்பூரில் பேனர்கள் அதிரடியாக அகற்றம்; மாநகராட்சி ஆணையாளரிடம் டிராபிக் ராமசாமி புகார்
திருப்பூர் மாநகரில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினார்கள். மேலும் பேனர்களை வைக்க அனுமதிக்கக்கூடாது என்று திருப்பூர் வந்த டிராபிக் ராமசாமி, மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார்.
திருப்பூர்,
சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானதை தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ரோட்டோரம் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் அகற்றி வருகிறார்கள்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின்படி உதவி ஆணையாளர்கள் மாநகரில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்களை நேற்று காலை முதல் அதிரடியாக அகற்றினார்கள். குறிப்பாக அரசியல் கட்சியினர் வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றினார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை குண்டடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிராபிக் ராமசாமி காரில் திருப்பூர் வழியாக சென்றார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே தாராபுரம் செல்லும் ரோட்டோரம் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை பார்த்ததும் காரில் இருந்து டிராபிக் ராமசாமி கீழே இறங்கினார். அந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் அங்கு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா தலைமையில் ஊழியர்கள் வந்து பேனர்களை அகற்றினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு டிராபிக் ராமசாமி சென்றார்.
கலெக்டர் வெளியூர் சென்றதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த ஆணையாளரின் உதவியாளரிடம், மாநகரில் பேனர் வைக்க எதற்கு அனுமதி கொடுத்தீர்கள்? என்று கேட்டார். மேலும் செல்போன் மூலமாக ஆணையாளரை தொடர்பு கொண்டு பேனர் வைக்க அனுமதிக்காதீர்கள் என்று பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுபோல் காங்கேயம் கிராஸ் ரோடு பகுதியில் தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த் திருப்பூர் வருகையையொட்டி கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். அப்போது அங்கு வந்த தே.மு.தி.க. வினர் பேனர்களை அகற்ற வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தெற்கு போலீசார் அங்கு வந்து தே.மு.தி.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கேயம் ரோட்டில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை இன்று(நேற்று) மாலைக்குள் நாங்களே அப்புறப்படுத்தி விடுகிறோம் என்று கட்சியினர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.
மாநகர் முழுவதும் பிரதான ரோட்டோரம் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள்,, கட்சிக்கொடிகள், தோரணங்கள் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.
மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, மாநகரில் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி இல்லை. பேனர் வைத்தால் உடனடியாக அகற்றப்படும். இதற்கு கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.