தட்சிண கன்னடா மாவட்ட புதிய கலெக்டராக சிந்து பி.ரூபேஷ் பதவி ஏற்பு

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக இருந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார்.

Update: 2019-09-07 23:22 GMT
மங்களூரு, 

சசிகாந்த் செந்தில், ராஜினாமா செய்த 24 மணி நேரத்திற்குள் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக சிந்து பி.ரூபேஷ் நியமிக்கப்பட்டார். அவர் உடுப்பி மாவட்ட பஞ்சாயத்த முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சிந்து பி.ரூபேஷ், நேற்று மங்களூருவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம், உதவி கலெக்டர் ரூபா பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கலெக்டராக பதவி ஏற்றுள்ள சிந்து பி.ரூபேஷ், தட்சிண கன்னடா மாவட்டத்தின் 2-வது பெண் கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்