டேராடூன் தேசிய ராணுவக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

டேராடூனில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-07 22:00 GMT
நாகர்கோவில்,

உத்தராஞ்சல் மாநிலம் டேராடூனில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரிக்கு 2020-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதற்கு தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 7-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அல்லது 7-ம் வகுப்பில் படித்து முடித்த மாணவர்களாக இருக்க வேண்டும். 11½ வயதிற்கு குறையாமலும், 13 வயதினை அடையாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-1-2007-க்கு முன்பு அல்லது 1-7-2009-க்கு பின்பு பிறந்திருக்கக் கூடாது.

விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேட்டினைப் பெற பொதுப் பிரிவினர் 600 ரூபாய்க்கான வரைவோலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சாதிச் சான்றுடன் 555 ரூபாய்க்கான வரைவோலையை பதிவு தபாலிலோ, விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும். இவற்றை The Co-m-m-a-n-d-ant, RI-MC, De-h-r-a-dun, Dr-aw-ee Br-a-n-ch. (State Ba-nk of In-d-ia, TEL Bh-av-an, De-h-r-a-dun. Ba-nk Co-de.01576) Utta-r-k-a-nd என்ற முகவரியில் பெற வேண்டும். முகவரியை தட்டச்சு செய்தோ அல்லது தெளிவான எழுத்து மூலமோ ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் தொடர்பு எண்ணுடன் எழுத வேண்டும்.

-RIMC -ல் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் பெற ‘தி கமாண்டன்ட், ராஷ்ட்ரிய பாரதீய செய்னா காலேஜ், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி, டேராடூன், கான்ட், உத்ராஞ்சல் -248 003‘ என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் The Co-nt-r-o-l-l-er of Ex-a-m-i-n-at-i-ons, TN-P-SC, Ch-e-n-n-ai -3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். எழுத்து தேர்வு 1-12-2019 மற்றும் 2-12-2019 ஆகிய தேதிகளில் நடைபெறும். இது பற்றிய மேலும் விபரங்களுக்கு www.ri-mc.org என்ற இணையதளத்தில் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

இத்தகவலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்