சசிகாந்த் செந்தில் ராஜினாமா எதிரொலி: தட்சிண கன்னடா மாவட்ட புதிய கலெக்டராக சிந்து பி.ரூபேஷ் நியமனம்
சசிகாந்த் செந்தில் ராஜினாமா எதிரொலியாக தட்சிண கன்னடா மாவட்ட புதிய கலெக்டராக சிந்து பி.ரூபேஷ் நியமனம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் ஜனநாயகத்தின் கூட்டமைப்பில் சமரசம் செய்து பணியை தொடர விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்ட புதிய கலெக்டராக சிந்து பி.ரூபேசை நியமனம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவை சேர்ந்த இவர் தற்போது உடுப்பி மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.