குடும்ப தகராறில், பெண்ணை அரிவாள்மனையால் வெட்டிய கணவர் கைது

குடும்ப தகராறில் பெண்ணை அரிவாள்மனையால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-06 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 53). இவருடைய மனைவி ராணி (48). இவர்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தேவநாதன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி ராணியிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தேவநாதன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவருக்கும் அவரது மனைவி ராணிக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவநாதன், ராணியை திட்டியதோடு அருகில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து அவரது கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராணி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவநாதனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்