நெல்லை மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா: வ.உ.சி. சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நெல்லை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2019-09-05 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடல் அருகே சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் உள்ளது. இங்கு அவரது 148-வது பிறந்தநாளையொட்டி நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் கலெக்டர் ஷில்பா தலைமையில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளையும் நடவு செய்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், ஆவின் தலைவர் சுதா பரமசிவன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அ.தி.மு.க. மாநகர மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், இளைஞர் அணி அரிகர சிவசங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சக்தி ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, வக்கீல் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் உள்பட பலர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் நட்சத்திர வெற்றி தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் என்.சுந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் ஆகியோர் தலைமையிலும், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவன தலைவர் நெல்லை ஜீவா தலைமையிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

வ.உ.சி. குடும்பத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மற்றும் இவருடைய மகள் சிதம்பரவல்லி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் புளியரை ராஜா தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்பினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க நெல்லை மாட்டம் சார்பில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்