மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

தேனி அருகே மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2019-09-04 21:30 GMT
தேனி,

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த கணேசன் மகன் கோபிநாதன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகாதேவி (30). கோபிநாதனுக்கு கல்லீரல் பாதிப்பு நோய் இருந்துள்ளது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோய் பாதிப்பால் வலி தாங்க முடியாமல் கடந்த 31-ந்தேதி அவர் மதுவில், விஷம் கலந்து குடித்து மயங்கினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக கோபிநாதன் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி கார்த்திகாதேவி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்