திருப்பூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சாவு

திருப்பூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை இறந்தது.

Update: 2019-09-03 23:00 GMT
நல்லூர்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உதயசந்த் சிங்கிஸ்வா (வயது 25). இவர் திருப்பூர் மணியகாரம்பாளையம் ரோடு, வள்ளியம்மை நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் பரமகுடியை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 வயது உடைய விஸ்வந்த்குமார் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து குழந்தைக்கு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை குழந்தை விஸ்வந்த்குமாருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்