தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்: சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் பெங்களூரு வருகை - விசாரணை சூடுபிடிக்கிறது
குமாரசாமி ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் பெங்களூரு வந்தனர். இதனைதொடர்ந்து தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பான விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு(2018) ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை கர்நாடகத்தில் தொலைபேசி ஒட்டுகேட்பு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். கர்நாடக அரசின் உத்தரவை தொடர்ந்து தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு கிரண் உள்பட 5 அதிகாரிகள் பெங்களூருவுக்கு வந்தனர். ஏற்கனவே தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்திருந்தனர்.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 3 பேரை அழைத்து, அவர்களிடம் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் வெளியானது எப்படி?. யார் மூலமாக இந்த விவகாரம் வெளியே வந்தது உள்ளிட்ட விவரங்களையும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
குமாரசாமி ஆட்சியில் தனக்கு போலீஸ் கமிஷனர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரிடம் சிபாரிசு கேட்டு தற்போதைய போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், செல்போனில் பேசி இருந்த ஆடியோ தான் வெளியாகி இருந்தது. இந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளின் பங்கு தான் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது குமாரசாமி ஆட்சியில் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமார், துணை போலீஸ் கமிஷனர்கள் கிரீஷ், அப்துல் அகாத் உள்ளிட்ட போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் முதற்கட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளான அலோக்குமார், கிரீஷ், அப்துல் அகாத், தற்போது குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த போலீஸ் அதிகாரிகளிடம் இன்று(திங்கட்கிழமை) அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெறலாம் என்றும், அதன்பிறகு அரசியல் கட்சி தலைவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் வருகையை தொடர்ந்து தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பான விசாரணை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.