மாவட்டத்தில் 109 மையங்களில் குரூப்-4 தேர்வை 28 ஆயிரத்து 329 பேர் எழுதினர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த குரூப்-4 தேர்வை 28 ஆயிரத்து 329 பேர் எழுதினார்கள்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி தாலுகாவில் 38 மையங்களிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 5 மையங்களிலும், ஓசூர் தாலுகாவில் 28 மையங்களிலும், போச்சம்பள்ளி தாலுகாவில் 14 மையங்களிலும், ஊத்தங்கரை தாலுகாவில் 15 மையங்களிலும், பர்கூர் தாலுகாவில் 6 மையங்களிலும், சூளகிரி தாலுகாவில் 3 மையங்களிலும் என மொத்தம் 109 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி மையங்களில் விண்ணப்பித்த 12 ஆயிரத்து 398 பேரில் 10 ஆயிரத்து 384 பேர் தேர்வு எழுதினார்கள். 2 ஆயிரத்து 14 பேர் தேர்வு எழுதவில்லை. தேன்கனிக்கோட்டை மையங்களில் விண்ணப்பித்த ஆயிரத்து 473 பேரில் ஆயிரத்து 211 பேர் தேர்வு எழுதினார்கள். 262 பேர் தேர்வு எழுதவில்லை.
ஓசூர் மையங்களில் விண்ணப்பித்த 8 ஆயிரத்து 759 பேரில் 6 ஆயிரத்து 651 பேர் தேர்வு எழுதினார்கள். 2 ஆயிரத்து 108 பேர் தேர்வு எழுதவில்லை. போச்சம்பள்ளி மையங்களில் விண்ணப்பித்த 4 ஆயிரத்து 560 பேரில் 4 ஆயிரத்து 8 பேர் தேர்வு எழுதினார்கள். 552 பேர் தேர்வு எழுதவில்லை. ஊத்தங்கரை மையங்களில் விண்ணப்பித்த 4 ஆயிரத்து 418 பேரில் 3 ஆயிரத்து 812 பேர் தேர்வு எழுதினார்கள். 606 பேர் தேர்வு எழுதவில்லை.
பர்கூர் மையங்களில் விண்ணப்பித்த ஆயிரத்து 898 பேரில் ஆயிரத்து 625 பேர் தேர்வு எழுதினார்கள். 273 பேர் தேர்வு எழுதவில்லை. சூளகிரி மையங்களில் விண்ணப்பித்த 729 பேரில் 638 பேர் தேர்வு எழுதினார்கள். 91 பேர் தேர்வு எழுதவில்லை. மொத்தத்தில் தேர்வுக்காக விண்ணப்பித்த 34 ஆயிரத்து 235 பேரில், 28 ஆயிரத்து 329 பேர் தேர்வு எழுதினார்கள். 5 ஆயிரத்து 906 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களுக்கு வந்தவர்கள் சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி தேர்வு மையங்களில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார். மேலும் தேர்வை கண்காணிப்பதற்காக 23 சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தது.