ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; உயிருடன் இருந்ததால் கடலில் விடப்பட்டது
ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 500 கிலோ கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடல் அட்டைகள் உயிருடன் இருந்ததால் நீதிபதி முன்னிலையில் பாம்பன் கடலில் விடப்பட்டது.
பனைக்குளம்,
ராமேசுவரம் அருகே மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடித்து வரப்படுவதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், கருப்பசாமி உள்ளிட்ட கடலோர போலீசார் மண்டபம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கடல் பகுதியில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விசைப் படகில் ஏறி சோதனை செய்தனர்.
அந்தப்படகில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகள் சுமார் 500 கிலோ இருந்தன. அதனை பறிமுதல் செய்த கடலோர போலீசார், கடல் அட்டைகளை பிடித்து வந்ததாக படகில் இருந்த மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த முகமது அப்துல் ரகுமான் (வயது 35), காதர் (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பிடிபட்ட கடல் அட்டைகள் அனைத்தும் உயிருடன் இருந்ததால் அதை உடனடியாக காப்பாற்றும் நோக்கத்தில் கடலில் விடுவதற்காக பாம்பன் ரோடு பாலம் கொண்டு வந்தனர். அங்கு வந்த ராமநாதபுரம் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் உயிருடன் இருந்த கடல் அட்டைகளை பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவரது முன்னிலையிலேயே அனைத்து கடல் அட்டைகளையும் வனத்துறையினர் பாம்பன் ரோடு பாலத்திலிருந்து கடலில் கொட்டினார்கள். அப்போது மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் உடனிருந்தார்.
500 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தி ஏஜெண்டுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்ததும், இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.