மதகடிப்பட்டு சந்தைக்கு மாற்று இடம் - கோபிகா எம்.எல்.ஏ. வேண்டுகோள்
மதகடிப்பட்டு சந்தைக்கு மாற்று இடம் தந்து கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோபிகா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் பேசிய விவரம் வருமாறு:-
கோபிகா (என்.ஆர்.காங்): மதகடிப்பட்டு மற்றும் திருவாண்டார்கோவில் ஆகிய 2 ஏரிகள் மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாலம் ஓராண்டுக்கு முன்பே தூர்வார பூமிபூஜை செய்யப்பட்டது. ஆனால் வேலை இன்னும் தொடங்கவில்லை. வம்புபட்டு கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட புதிய போர்வெல் அமைத்துத்தர வேண்டும். சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. பொதுப்பணித்துறை அதில் கவனம் செலுத்தி சாலைகளை புதுப்பித்துத்தர வேண்டும்.
மதகடிப்பட்டு காய்கறி அங்காடி, மீன் மார்க்கெட் போன்ற வசதிகள் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகிறது. ஆகையால் புதிதாக இடம் தேர்வு செய்து 2 கட்டிடங்களை கட்டித்தரவேண்டும்.
திருவாண்டார்கோவில், சன்னியாசிகுப்பம், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் ஆகிய பஞ்சாயத்துகளில் குப்பை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யவேண்டும். சம்போடை வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதை உடனடியாக தூர்வாரினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
எனது தொகுதியில் பார், சாராயக்கடை வைக்க இடம் தேர்வு செய்யப்படுவதில் அரசு கவனம் செலுத்துவது கிடையாது. இதனால் வரும் பிரச்சினைகளை சமாளிக்க மிகவும் கடினமாக உள்ளதால் அரசு முழு கவனம் செலுத்தி சுமுகமாக தீர்வு வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் பணியமர்த்தப்பட்ட 2,648 ஊழியர்களின் நிலைமை என்ன என்று தெரிவிக்கவேண்டும்.
என்.எஸ்.ஜே.ஜெயபால் (என்.ஆர்.காங்): பட்ஜெட்டில் அரைத்த மாவையே அரைத்து உள்ளார்கள். புதிதாக எந்த திட்டமும் இல்லை. கடந்த ஆட்சியில் திட்டங்களுக்கான செலவு ரூ.2,500 கோடி வரை இருந்தது. ஆனால் இப்போது ரூ.1,337 கோடியாக சுருங்கி உள்ளது.
கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பல நூறு கோடிகள் செலவிடப்படாமல் உள்ளது. நிதி பல துறைகளில் முடங்கி உள்ளது. அதை எடுத்து மக்களுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். குப்பை வரி, மின்சார வரியை குறைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.