வேதாரண்யத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

வேதாரண்யத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

Update: 2019-08-31 22:45 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆறு, கடல், ஏரி, குளங்களில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு நாளை(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேதாரண்யத்தில் 35 இடங்களிலும், வாய்மேட்டில் 17 இடங்களிலும், தலைஞாயிறில் 16 இடங்களிலும், கரியாப்பட்டினத்தில் 19 இடங்களிலும், வேட்டைக்காரனிருப்பில் 15 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் வேதாரண்யத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபிபுல்லா தலைமை தாங்கினார். தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.

விதிமுறைகள்

விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய குறிப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்