மண்டபம் அருகே தீவில் கரை ஒதுங்கி கிடந்த இலங்கை படகில் வந்தவர்கள் தீவிரவாதிகளா? தீவிர தேடுதல் வேட்டை
மண்டபம் அருகே மானோலிபுட்டி தீவில் இலங்கையை சேர்ந்த படகு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. அதில் வந்தவர்கள் தீவிரவாதிகளா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுவதுடன், தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றி 21 தீவுகள் உள்ளன. இதில் பாம்பன் அருகே குருசடை தீவு, சிங்கிலி தீவும், மண்டபம் அருகே முயல்தீவு, மனோலிபுட்டி தீவுகளும் உள்ளன. வனத்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த தீவு பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை அந்த வழியாக நாட்டுப்படகில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், கருப்பசாமி உள்ளிட்ட போலீசார் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகு மூலம் மனோலிபுட்டி தீவுக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தீவை ஒட்டிய கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இறங்கி கடலோர போலீசார் சோதனையிட்டனர். அந்த படகில் என்ஜினோ, தூண்டில் நரம்பு உள்ளிட்ட எந்தவொரு பொருட்களும் இல்லை என சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து தீவு பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா, யாரும் பதுங்கி உள்ளனரா? என்று கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் தீவு பகுதியிலோ யாரும் இல்லாததால் பிளாஸ்டிக் படகை மீன்பிடி படகு மூலம் கயிறு கட்டி மண்டபம் இழுத்துச் சென்று சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றி கடலோர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மனோலிபுட்டி தீவு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் படகு 16 அடி நீளமும், 7 அடி அகலமும் கொண்டது. அந்த படகில் ஒ.எப்.ஆர்.பி.ஏ.4624 என்ற பதிவு எண் எழுதப்பட்டுள்ளதுடன், சின்னக்குடியிருப்பு கல்பட்டி என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் படகின் என்ஜினை புதைத்து வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனரா என விசாரித்து வருகிறோம். இந்த படகு இலங்கை கல்பட்டி அல்லது நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்ததாக இருக்கலாம். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், பிளாஸ்டிக் படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்களா அல்லது தீவிரவாதிகளா? என்றும் கடலோர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவி இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த அடுத்த சில நாட்களில், மண்டபம் அருகே உள்ள தீவு பகுதியில் இலங்கையை சேர்ந்த படகு ஒன்று மர்மமான முறையில் ஆள் இல்லாமல் நின்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த படகில் வந்து தப்பியவர்கள் யார்? என்பதை கண்டறிய கடற்படை, கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.