கரூர் அருகே, மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

கரூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-30 22:45 GMT
கரூர்,

கரூர் அருகே உள்ள சோமூரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 44). தொழிலாளி. இவர், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியிடம் மது குடிக்க சிவகுமார் பணம் கேட்டார். அப்போது சரிவர வேலைக்கு செல்லாமல் இப்படி மது குடித்து விட்டு சுற்றுகிறீர்களே? எனக்கூறி அவர் கண்டித்தார். இதனால் மனமுடைந்த சிவகுமார், மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டின் அருகே மயங்கினார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்