தொண்டமாநத்தம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட குளம் மீட்பு: எதிர்ப்புகளை மீறி தூர்வாரப்பட்டது
வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட குளம் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அந்த குளத்தில் பலத்த எதிர்ப்புகளையும் மீறி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் தூர்வாரினர்.
வில்லியனூர்,
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அந்த பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம் சமாதி குட்டை என்ற குளம் இருந்தது. சுமார் 17 ஆயிரத்து 754 சதுர அடி அளவில் அமைந்திருந்த இந்த குளம் ஆக்கிரமிப்புகளால் மாயமாகி இருந்தது. அங்கு சிலர் குடியிருப்புகளை அமைத்தும் மற்றும் செங்கற்களை குவித்தும் வைத்திருந்ததை கண்டு கொம்யூன் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதையடுத்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தலைமையில் உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று குளத்தின் பரப்பை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எதிர்ப்புகளையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு குளத்தையும் தூர்வாரினார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “வில்லியனூர் கொம்யூன் நிர்வாகத்துக்குட்பட்ட அனைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும். மேலும் நீர்நிலைகளை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தனர்.