பயந்தர் கழிமுக ரெயில்வே பாலத்தில் துப்பட்டாவால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை

பயந்தர் கழிமுக ரெயில்வே பாலத்தில் துப்பட்டாவால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-08-26 23:00 GMT
வசாய்,

தானே மாவட்டம் பயந்தர் கழிமுக ரெயில்வே பாலத்தின் நடுவில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் துப்பட்டாவை கொண்டு தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டனர்.

போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தியதில், அடையாள அட்டை ஒன்று சிக்கியது. இதன் மூலம் அவர் நவிமும்பை கோபர்கைர்னே பகுதியை சேர்ந்த ராஜ்தேவ் சாந்தாராம் யாதவ் (வயது21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பட்டாவால் தூக்குப்போட்டு உள்ளதால் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்