கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறுகள் சீரமைக்கும் பணி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறுகள் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பனந்தாள்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தை சுற்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 9 எண்ணெய் கிணறுகளை அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை குழாய்கள் மூலம் மயிலாடுதுறைக்கு எடுத்து சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு கச்சா எண்ணெய்யில் உள்ள பல்வேறு பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகிறது.
கதிராமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதியில் எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கடந்த ஆண்டு பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் 200 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறுகளை சீரமைக்கும் பணியை நேற்று தொடங்கி உள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வண்ணம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணி நடைபெறும் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.