போரிவிலியில் போலீஸ்காரர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
போரிவிலியில் போலீஸ்காரர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
போரிவிலியில் போலீஸ்காரர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் மகன்
மும்பை போரிவிலியை சேர்ந்தவர் அனில். இவர் மலாடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சின்மய் (வயது20). வசாயில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் சின்மய் தந்தையிடம் தலைவலிப்பதாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார்.
இந்தநிலையில் வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது சகோதரர் சேத்தன் கதவை தட்டினார். ஆனால் சின்மய் கதவை திறக்கவில்லை.
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மின்விசிறியில் சின்மய் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை நடத்தியதில் சின்மய் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து போரிவிலி போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்மயின் தற் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.