ஆணைக்குப்பம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆணைக்குப்பம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமினை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-25 22:45 GMT
நன்னிலம்,

நன்னிலம் வட்டம் ஆணைக்குப்பம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜெயதீபன், உதவி கலெக்டர் முருகதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பு, தாசில்தார் திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் குறைந்த அளவே வழங்கப்படுகிறது என கேட்டதற்கு மத்திய அரசு கொடுக்கும் மண்எண்ணெய் பகிர்ந்து வழங்கப்படுகிறது. எல்லா மாநிலத்திற்கும் இப்படி தான் வழங்குகிறார்கள். நமக்கு அதிகமாக தேவைப்படுகிறது. கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள், சிலிண்டர்கள் இல்லாதவர்கள் என கண்டறிந்து, சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு குறைந்த அளவும், சிலிண்டர் இல்லாதவர்களுக்கு முழு அளவும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்