தூர்வாரிய குளங்களை பராமரிக்க வேண்டும்; கிராம மக்களுக்கு, கிரண்பெடி வேண்டுகோள்
தூர்வாரப்பட்ட குளங்களை பராமரிக்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
திருக்கனூர்,
கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் கிராமப் புறங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆய்வின்போது நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நேற்று திருக்கனூர் அருகே சோரப்பட்டு பச்சைவாழியம்மன் கோவில் அருகே மன்னார்சாமி குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த குளம் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் மற்றும் கிராம மக்கள் பங்களிப்புடன் சுமார் ரூ.4¾ லட்சம் செலவில் தூர்வாரப்பட்டது. தூர்வாரும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்துவைத்தார். பின்னர் குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தூர்வாரப்பட்ட குளங்களை கிராம மக்கள் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் கவர்னர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.