உடையார்பாளையம் அருகே, மோட்டார் சைக்கிள் திருட்டு
உடையார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 52). இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் திருடுபோய்இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.