நாமக்கல்லில், 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் 2-வது நாளாக ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முன்னாள் மாவட்டத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சித்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரத்தை விடுவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் குமரன், வீரப்பன், மெய்ஞானமூர்த்தி, பாண்டியன், திருச்செங்கோடு நகர தலைவர் செல்வகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி கண்ணியம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.