1-ந் தேதி தொடக்கம்: வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறுகிறது
மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்க்கும் பணி வருகிற 1-ந் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெறும். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆண்டு தோறும் நடந்தாலும் தேர்தல் நேரத்தில் பெயர் விடுபட்டதாகவும், பெயர் இடமாறி உள்ளதாகவும் புகார்கள் எழுகின்றன.
இதை தவிர்க்க இந்த முறை வீடு வீடாக சென்று வாக்காளார் பட்டியல் சரி பார்க்கும் பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பட்டியலை சீர்படுத்தும் பணி 1.9.2019 முதல் 30.9.2019 வரை நடைபெற உள்ளது.
அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் உரிய படிவங்களில் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் மற்றும் அரசு இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்க்கவும் மற்றும் விவரங்களை உறுதி செய்யவும் கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர் வாயிலாக வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பணிகள் முடிந்து 15.10.2019-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதையொட்டி வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்திடவும், வாக்காளர் இறுதி பட்டியல் 1.1.2020 அன்று வெளியிடவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.