நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நாமக்கல், பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 30 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
நாமக்கல்-30, பரமத்திவேலூர்-14, சேந்தமங்கலம்-11, ராசிபுரம்-8, குமாரபாளையம்-4, மங்களபுரம்-3, புதுச்சத்திரம்-3, திருச்செங்கோடு-1. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 74 மி.மீட்டர் ஆகும். இதற்கிடையே நேற்று காலையில் மழை இல்லை. பிற்பகல் 1.30 மணி அளவில் நாமக்கல்லில் மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிந்தது. இதேபோல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி நுழைவாயில் முன்பும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.