பாண்டமங்கலம் அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
பாண்டமங்கலம் அருகே, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை மிரட்டி 6 பவுன் தங்க நகைகளை பறித்துச்சென்ற 3 மர்ம நபர்களை பரமத்தி வேலூர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள உரம்பூரைச் சேர்ந்தவர் சண்முகம், லாரி டிரைவர். இவரது மனைவி நதியா (வயது 32). இவர்களுக்கு சபரியா, சவுபர்ணிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகம் லாரிக்கு சென்று விட்டதால், நதியா தனது 2 குழ்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நதியா வீட்டின் முன்பக்க இரும்பு கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு வீட்டிற்குள் இருந்த உள்பக்க கதவை பூட்டாமல் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று துங்கிக்கொண்டிருந்த நதியாவை எழுப்பி, மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
நதியா வீட்டிற்கு வெளியே வந்து கூச்சல் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். பின்னர் பரமத்தி வேலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை மிரட்டி தங்க நகைகளை பறித்துச்சென்ற 3 மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.