ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன் விழா: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ஈரோடு,
ஈரோடு திண்டலில் வேளாளர் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வேளாளர் கல்வி அறக்கட்டளை மூலம் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் கடந்த 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் வேளாளர் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, வேளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேளாளர் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி, வேளாளர் கல்வியியல் கல்லூரி, வேளாளர் செவிலியர் கல்லூரி, வி.ஈ.டி. இருபாலர் கலை அறிவியல் கல்லூரி என்று 11 கல்வி நிறுவனங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் என்று மிகப்பெரிய கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது. 280 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தற்போது 6 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இயங்கி வருகிறது.
வேளாளர் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லூரியின் முதல் தலைவராக வி.எம். கைலாச கவுண்டர் (1970-1976) செயல்பட்டார். அதைத்தொடர்ந்து எல்.கே.முத்துசாமி (1976-1979) வரை தலைவராக இருந்தார். ஏ.எம்.நல்லசாமி கவுண்டர் (1979-1984), கே.சின்னசாமி (1984-1999) ஆகியோர் தலைவர்களாக செயல்பட்டனர். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளராக 1970 முதல் 1981 வரை எஸ்.சி.செங்கோட்டுவேலப்பன் இயங்கினார். 1981 முதல் 1999 வரை கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளராக எஸ்.துரைசாமி கவுண்டர் செயல்பட்டார். பி.கே.பழனிசாமி கவுண்டர் 1999-வரை பொருளாளராக இருந்தார்.
இவர்களுக்கு பின்னர் தற்போதைய தலைவராக எஸ்.எஸ்.கந்தசாமி, செயலாளர் மற்றும் தாளாளராக எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளராக பி.கே.பி.அருண் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு முக்கிய பிரமுகர்களால் உயர்ந்த திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் 50 வது ஆண்டு பொன்விழா 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதன் தொடக்கவிழா நேற்று கல்லூரி மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், கல்லூரி தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேளாளர் கல்வி அறக்கட்டளை மற்றும் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டார். மேலும், வி.ஈ.டி. இருபாலர் கலை அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடம் மற்றும் பொன்விழா நினைவு கல்வெட்டுகளை திறந்து வைத்தார். மேலும், பொன்விழாவையொட்டி இந்திய தபால் துறை மூலம் வெளியிடப்பட்ட கவுரவ தபால் உறையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசினார்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன், முன்னாள் எம்.பி.சின்னசாமி உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், மண்டலக்குழு முன்னாள் தலைவர் ரா.மனோகரன், இந்து கல்வி நிலையம் தாளாளர் கே.கே.பாலுசாமி, அல்-அமீன் கல்லூரி தாளாளர் ஜபாருல்லா, டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் என்.மரகதம் கல்லூரி ஆண்டு அறிக்கை வாசித்தார். முன்னதாக கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் வரவேற்றார். முடிவில் பொருளாளர் பி.கே.பி.அருண் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், வேளாளர் பொறியியல் கல்லூரி நிர்வாகியுமான எம்.யுவராஜா தலைமையில் கல்லூரிகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். வேளாளர் கல்வி அறக்கட்டளைக்கு உள்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ஊழியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நேற்று பிற்பகல் சிரிப்பே சிறப்பு என்ற தலைப்பில் மதுரை முத்து பேசினார். தொடர்ந்து, மகளிரும், சமயமும் என்ற தலைப்பில் கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசினார். மாலையில் வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக வேளாளர் கல்வி நிறுவனங்களின் சார் பில் முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது.
இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கல்லூரி நுழைவுவாயில் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வு நடக்கிறது.